#BREAKING : சென்னையில் பயங்கரம்..! பட்டப்பகலில் தனியார் வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு அரிவாள் வெட்டு..!
சென்னை தி. நகரில் எச்.டி.எப்.சி., வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல வங்கிப் பணிகள் நடந்து வந்த நிலையில், வாடிக்கையாளர் போல மர்ம நபர் உள்ளே நுழைந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ் என்பவரை அந்த நபர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
வங்கி ஊழியரின் காது வெட்டப்பட்ட நிலையில், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
கைது செய்யப்பட்ட நபரின் இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை வருகின்றனர்