1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை! தந்தையே சுட்டு கொன்ற கொடூரம்..!

W

குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான இவர் மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடுவது தொடர்பாக தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 10) ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
டென்னிஸ் வீராங்கனை ராதிகா தனது குடும்பத்துடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்றபோது, ராதிகாவை அவரது தந்தையே துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டதாகவும், அதில் மூன்று குண்டுகள் ராதிகாவை துளைத்து அவரது உயிரை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, காவல்துறையினர் ராதிகாவின் தந்தையைக் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like