#BREAKING: தமிழகத்தில் பெரும் பதற்றம் : தஞ்சையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை..!!
தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 26. வகுப்பறையில் இன்று (நவ.,20) ஆசிரியை ரமணியை சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன் குமார் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதன் குமாரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால், மதன் கொலை செய்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், வகுப்பறையில் கழுத்தில் குத்தி ஆசிரியர் ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.