#BREAKING : கடலூரில் பதற்றம் : மாலை 6 மணி வரை டாஸ்மாக் திறக்கப்படாது..!

கடலூர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு என்எல்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த போராட்டம் கடலூர் மட்டுமல்லாமல் காஞ்சி, தி.மலை என மற்ற மாட்டங்களில் தீவிரமடையும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, பேருந்து உடைப்பு, டயர் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.