#BREAKING : தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி..!
அமைச்சர் ஐ. பெரியசாமி வயிற்று வலி காரணமாக நேற்று (ஆக.25) இரவு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் தி.மு.க.வில் மாநில துணை பொது செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், சின்னாளபட்டியில், இன்று முதல்வரின் காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சியில், அவர் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.