#BREAKING : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார, பூத் கமிட்டிகள் கலைப்பு..!
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பாவின் கட்டளைப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட,வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றது. அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின்படி உறுப்பினர் சேர்க்கையை சேர்ப்பவர்களின், புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.