#BREAKING: ஆதாரங்களை வெளியிட்டது தமிழக அரசு..மாட்டி கொண்டாரா ஆளுநர் ரவி..?

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கே.சி. வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, ஒரு சில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என விளக்கமளிக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க எந்த கடிதமும் தமிழக அரசு சார்பில் வரவில்லை என்று ஆளுநர் மாளிகை நேற்று விளக்கம் கொடுத்து இருந்து. இதற்க்கு நேற்றே தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசுக்கான பப்ளிக் டிபார்ட்மென்ட் பொதுத்துறை சார்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதன் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது என அனைத்துக்குமான தகவல்களையும் வெளிட்டுள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி கவர்னர் உடைய செயலாளர் அனுப்பப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்டு அக்னாலேஜ்மென்ட் போட்டதற்கான கடித விவரம், கடந்த 2022 செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ராஜ்பவர்களுக்கு அனுப்பப்பட்டதற்கான கடிதத்தை வாங்கி விட்டேன் என்று சொன்ன அக்னாலேஜ்மென்ட் விவரங்களை பப்ளிக் டிபார்ட்மெண்ட் வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த இரண்டு கடிதங்களையும் பெற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை வழங்கிய ஒப்புகை சீட்டுகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"கோப்பை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது