#BREAKING : ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது தமிழக அரசு..!
ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது.
பன்னீர் 1 கி.கி - ரூ.550
* பன்னீர் 1/2 கி.கி - ரூ. 300
* பன்னீர் 200 கி - ரூ.120
* பாதாம் மிக்ஸ் 200 கிராம் - ரூ.120