1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS :- எண்ணூர் கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை மூட தமிழக அரசு உத்தரவு..!!

Q

சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது. அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

 

இந்நிலையில் எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கோரமண்டல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டபோதும் தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like