#BREAKING: விஜய்க்கு தமிழக காங்., அழைப்பு..!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஆனாலும் அவரது கட்சியை பற்றி மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலான தருணங்களில் பேசி வருகின்றன. கூட்டணிக்காக அச்சாரம் என்பது போல கருத்துகளை பகிர்ந்து வருகின்றன.
இந் நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
அவரது மாநாட்டில் அவர் (விஜய்) பேசிய உரை மதவாத சக்திகளுக்கு எதிராக இருந்தது. மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்று அவர் முன் எடுப்பார் என்றால் இண்டியா கூட்டணிக்கு வருவது அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாட்டுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது. இதுதான் யதார்த்தமாக ஒரு இந்திய பிரஜையாக நான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.