1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

1

சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 8 தொகுதிகளை குறைக்க நினைக்கிறது.” என பேசினார்.

இந்நிலையில் கூட உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மும்மொழிக்கொள்கை மற்றும் நீட் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனவும், அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.இதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்...மேலும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார். 

 


தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். 

 

மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. மும்மொழிக் கொள்கை மூலமாக மீண்டுமொரு மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என அதிரடியாக பேசினார் முதல்வர் ஸ்டாலின் 


 


 

Trending News

Latest News

You May Like