#BREAKING : பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்..!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-14-ம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண் ணப்பிக்கலாம், இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி யாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 12ஆம் வகுப்பு படித்து முடிக்கும் வரை கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்விற்கு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தான் தற்போது மாற்றம் வந்துள்ளது.
இதையொட்டி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், TNCMTSE எனப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேதி மாற்றம் பற்றி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.