#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரு தினங்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழன் அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், நேற்று மற்றும் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.