1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!

Q

வருகிற 25-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதில் இடம்பெறவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like