#BREAKING : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழிசை சவுந்தரராஜன் கைது!

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தீவிரம் காட்டி வந்த நிலையில் பாஜக தலைவர்கள் வீட்டின் முன்பு போலீசார் அனைவரும் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே பாஜக தலைவர்களில் ஒருவரான வினோஜை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தராஜன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர் போராட்டத்துக்கு போக வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக அவரை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
எந்த துறையில் இருந்தாலும் அவர் ஊழல் செய்கிறார். மின்சாரத்துறையில் இருந்த போது அவர் ஊழல் செய்தார். போக்குவரத்து துறையில் இருந்த போதும் அவர் ஊழல் செய்தார். தற்போதும் அவர் ஊழல் செய்கிறார். 1000 கோடி என்பது தொடக்கம் தான். பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பாஜகவின் தமிழிசை சௌந்தராஜன், வினோஜ் பி செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாஜகவின் போராட்டத்திற்க அனுமதி தர முடியாது என தமிழக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது