#BREAKING: பிரபல தமிழ் நடிகர் ICU-வில் அனுமதி!

பொதுவாக கராத்தே மாஸ்டராக அறியப்படும் ஷிஹான் உசேனி, நடிகர், வில்வித்தை வீரர், ஓவியர், சமையல் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். 1986-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்', ரஜினி நடித்த ஹாலிவுட் படமான 'பிளட் ஸ்டோன்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'வேடன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
90-களின் காலத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'திடீர் சமையல்' எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 'வீட்டிற்குத் திடீரென உறவினர்கள் வந்துவிட்டால், அவசரகதியில் அவர்களுக்கு சமையல் செய்வது எப்படி' என்பதை மையமாக வைத்து வெளியான இந்த நிகழ்ச்சி, அன்றைய காலத்து இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். 2001-ஆம் ஆண்டு வெளியான 'பத்ரி' படத்தில் விஜய்க்கு பாக்சிங் பயிற்சியாளராக நடித்த கதாபாத்திரம், சினிமாவிலும் பெயர் வாங்கிக்கொடுக்கும்படியான பாத்திரமாக அமைந்தது. உலக சாதனை, கின்னஸ் சாதனை என அடிக்கடி இவர் செய்யும் சாகச சம்பவங்களுக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அரசியல் ரீதியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர், ஷிஹான் உசேனி. அதே நேரத்தில் ஜெயலலிதாவுடன் மிக நெருக்கமாக இருந்த அவரது தோழியான சசிகலாவிற்கும் ஷிஹான் உசேனிக்கும் இடையே முரண்பாடு அதிகம்.
அவர் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.