1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதி..!

Q

தபேலா இசைக்கருவியின் மொத்த வித்தையும் கற்றுத் தெரிந்து தனி முத்திரை பதித்தவர் ஜாகிர் உசேன். தபேலா இசை கருவி மூலம் பிரபலமான இவர். இயக்குனர், திரைப்பட நடிகர் என பல திறமைகள் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார்.

மும்பையில் தபேலா இசைக் கலைஞருக்கு மகனாகப் பிறந்த இவர் மூன்று வயது முதல் தபேலா கற்கத் தொடங்கினார். ஐந்து வயதிலேயே தபேலா வாசிக்கத் தொடங்கி விட்டார். இளமைப் பருவம் முழுக்க மும்பையில் கழித்த இவர் உனக்கென தனி அடையாளம் வேண்டும் என தந்தை கூறியதை வேதவாக்காக எடுத்து தனக்கான ஒரு முத்திரையை பதிவிட்டார் ஜாகிர் உசேன்.

தனது 11 வயதில் இசை பயணத்தை தொடங்கிய ஜாகிர், 1970 ஆம் ஆண்டு திசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றார். அன்று தொடங்கி அவரது சர்வதேச பயணம் உலகம் முழுவதும் ஒலிக்க தொடங்கியது. ஆண்டுக்கு 150 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1973 ஆம் ஆண்டு லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட் என்ற ஆல்பத்தை முதலில் வெளியிட்டார். தொடர்ந்து அதன் பிறகு இவர் வெளியிட்ட அனைத்து இசை ஆல்பங்களும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன.

உலகம் முழுவதும் இருந்த புகழ்பெற்ற இசை கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவினார். தபேலா பீட் சயின்ஸ் என்ற பிரம்மாண்ட இசைக்கு குழுவை அமெரிக்க இசைக்கலைஞர் பில் லாஸ் வெல்லுடன் சேர்ந்து நிறுவினார்.

அது மட்டுமில்லாமல் இன் கஸ்டி, தி மிஸ்டிக் மஸார் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராக பணியாற்றினார்.

மலையாளத் திரைப்படமான வானப்பிரஸ்தம் என்ற படத்திற்கு இசையமைத்து அதில் நடித்தார். இது மும்பை சர்வதேச திரைப்பட விழா, இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் விருதுகளை பெற்றது.

இவரது 37 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1992 ஆம் ஆண்டு கிராமி விருது பெற்றார். இது தாளவாத்திய பிரிவில் முதன் முதலாக வழங்கப்பட்ட விருதாகும். 2009 ஆம் ஆண்டு மீண்டும் கிராமி விருது பெற்றார். பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் இசை மேதையான ஜாகிர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி இசை சமூகத்தையும் அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

ட்வீட் படி, அயூப் ஆலியா ஜாகிர் ஹுசைனைப் பின்பற்றுபவர்களிடம் அவரை விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய தங்கள் பிரார்த்தனைகளில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். மதிப்பிற்குரிய இசைக்கலைஞர் "கடுமையான நோய்களுக்கு" சிகிச்சை பெற்று வருவதாக புதுப்பிப்பு எடுத்துக்காட்டுகிறது, ஆனால் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது கிடைக்கவில்லை.


 


 

Trending News

Latest News

You May Like