1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி!

1

உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும் வெளியேற இந்திய அணி, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.

பின்னர் விராட் கோலி – ஷிவம் துபே இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

19 ஓவரில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனை ஹர்திக் பாண்ட்யா வீச முதல் பந்தில் டேவிட் மில்லர் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2 ஆவது பந்து பவுண்டரிக்கு செல்ல, 3 ஆவது மற்றும் 4 ஆவது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 5 ஆவது பந்தில் ரபாடா 4 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Trending News

Latest News

You May Like