1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : எஸ்.வி சேகருக்கு 1 மாத சிறை..!

1

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. 

 இந்நிலையில்,நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ் வி சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஜி. ஜெயவேல் தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

Trending News

Latest News

You May Like