#BREAKING : கன்னட நடிகர் தர்ஷனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
பின்னர் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தர்ஷன் போன்று, அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கும் இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் (ஜூலை) நிறைவு பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
இந்நிலையில், தர்ஷனின் ஜாமினை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனே கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.