#BREAKING : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்..!
கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஜாமின் தொகையாக ரூ. 10 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக எதுவும் பேசக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.