1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: சிவகங்கை அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

Q

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா 14. இவர் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் புகார் கூறியுள்ளனர். மாணவனின் இறப்பு குறித்து சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like