#BREAKING : தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்து லாரி உரிமையாளர்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலாண்டு வாகன வரி, டீசல் வரி விதிப்பு, சுங்கக்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, நவ.9ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.
அந்நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என்றும், தமிழ்நாடு முழுவதும் 6.5 லட்சம் லாரிகள் இயங்காததால், ரூ.30 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.