#BREAKING : நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸி., அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
போட்டிக்குப் பிறகு ஸ்மித் தனது சக வீரர்களிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியுடன் 5800 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். மேலும் 28 விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஸ்மித் வீழ்த்தியுள்ளார்.
2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் ஸ்மித் இடம்பெற்றார். 2015 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து விளையாட முடியாமல் போனதால், இடைக்கால கேப்டன் பதவியை வகித்தார்.