#BREAKING : முதல்வர் ஸ்டாலினின் விழுப்புரம் பயணம் ரத்து..!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்ட அவர், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்லவிருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 28.11.2024 5 29.11.2024 நாட்களில் விழுப்புரத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த கள ஆய்வு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.