#BREAKING : இன்று முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்..?
முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிவில், இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி முதல்வர் ஸ்டாலினுக்கு பொருத்தப்பட்டது.
இன்று (ஜூலை 27) மாலை அவர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ''முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஏற்கனவே பார்த்து வந்த வேலைகளை, அவர் எந்தவித தொய்வும் இன்றி செய்யலாம்'' என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.