1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

Q

தமிழகத்தில் ஆளும் திமுக, அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறது. அடுத்து வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து களம் காண, முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கட்சியினரை அவ்வப்போது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் என இரண்டு மட்டுமின்றி, முன்னதாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் திமுக தமிழகத்தில் தனது இருப்பை அழுத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலவீனத்தையும், தங்கள் கூட்டணியின் பலத்தையும் நம்பியே அடுத்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வந்தது. இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில், நடிகர் விஜய் நேரடியாகவே திமுகவை விமர்சித்ததுடன், திமுகதான் தனது அரசியல் எதிரி என்பதையும், திராவிட மாடலை குறிப்பிட்டு பேசினார். கொள்கை அளவில் பாஜகவை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆட்சியில் பங்கு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் மத்தியில் சமீபத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட சிலரைத் தவிர திமுகவின் வேறு முக்கியத் தலைவர்கள் யாரும் பெரிய அளவில் விஜய் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றவில்லை. அதன்பின் நடைபெற்ற திமுக தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்திலும், நடிகர் விஜய் விமர்சனம் குறித்து யாரும் பேச வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கூறிவிட்டதாகவும், அதனால் யாரும் இதுகுறித்து பேசமாட்டோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்கிறேன் கடந்த 4 ஆண்டுகளில் திமுக சாதனைகளை பார்க்க வேண்டும். வாழ்க வசவாளர்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like