#BREAKING : ஒரே நாளில் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்.. இனி குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்..!
விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார்.
பிற்பகல் 1 மணி அளவில் விருதுநகர் அடுத்த கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்ற முதல்வர், அங்கு ரசாயன பொருட்கள் வைக்கும் அறை, உற்பத்தி அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்து, தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, 36 பெண்கள் உட்பட 80 பேர் பணியாற்றும் அந்த பட்டாசு ஆலையில் இதுவரை எந்த விபத்தும் நடந்ததில்லை என்பதை கேட்டறிந்த முதல்வர், பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களை பாராட்டினார்.
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமையான சூழலை பராமரித்து, பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களையும் காப்பீட்டு திட்டத்தில் இணைக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தினார்.
அதற்கு முதல்வர், ‘‘பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’’ என்று உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
ரசாயன பொருட்கள் வைக்கும் அறை, உற்பத்தி அறை ஆகியவற்றை ஆய்வுசெய்து, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் . விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதனால் பட்டாசு தொழிலார்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
#Watch | "விபத்துகளில் உயிரிழக்கும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்"
— Sun News (@sunnewstamil) November 10, 2024
விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #CMStalinlnVirudhunagar | #CMStalin pic.twitter.com/PJWc0EHkCt