#BREAKING : எச்.ராஜா குற்றவாளி- சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இரு வழக்குகளில் தனித்தனியாக தலா 6 மாதங்கள் என மொத்தமாக 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.