1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - சிவாஜி மகன்..!

Q

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். 

வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க சிவாஜி பேரன் மறுத்தார்.

இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53 ஆயிரம் சதுர அடியில், 13 ஆயிரம் சதுர அடியை ஜப்தி செய்து பொது ஏலமிட்டு பணத்தை அந்நிறுவனத்துக்குக் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு நடிகர் பிரபுக்கு சொந்தமானது எனவும் ராம்குமார் தகவல்; ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதி அளித்து கடன் பிரச்னைக்கு தீர்வு காணும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like