1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING அதிர்ச்சி! மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!!

#BREAKING அதிர்ச்சி! மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!!


மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

ராம் விலாஸ் பாஸ்வானுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஒரு மாத காலமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 8 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடைசியாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இம்மாத இறுதியில் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ராம்விலாஸ் பாஸ்வான் உயிரிழந்துள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் இறந்ததை அவரது மகன் சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிஸ் யூ அப்பா என்று சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like