#BREAKING : மதுரையில் 'ஷாக்'..! ஆட்டு மந்தையுடன் பாஜகவினர் அடைப்பு..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியின் நீதி கேட்பு போராட்டம் இன்று மதுரையில் நடந்தது. இதில், கையில் சிலம்புடன் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைப்பதாக கூறி போலீசார் அழைத்துச் சென்றனர்.
கைது செய்தவர்களை மதுரை ஆடு வியாபாரிகள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகள் அருகே பாஜக மகளிரணியினர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் துர்நாற்றம் வீசுவதாக புகார்; ஏற்கெனவே ஆடுகள் இருந்த நிலையில், பாஜ்கவினர் கைதுக்குப் பிறகு கூடுதலாக ஆடுகள் அடைப்பால் சர்ச்சை எழுந்துள்ளது மேலும் அங்கு 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களை வேண்டுமென்றே இந்த மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய பா.ஜ., கட்சியினர், வேறு மண்டபத்துக்கு மாற்ற வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.