1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 2 நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

1

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி தேனி போலீசார் மனு இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Trending News

Latest News

You May Like