1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்..!

1

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு உச்சந்திமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இடைக்கால ஜாமீன் என்பது இந்த வழக்கிற்கு மட்டும்தான்; மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்புக் காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகியிருந்தால் இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like