#BREAKING : 7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் புதிதாக போளூர், செங்கம், சங்ககிரி, அவிநாசி, கோத்தகிரி, கன்னியாகுமரி மற்றும் பெருந்துறை ஆகிய புதிய 7 நகராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது.
எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
அரசு நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும். நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் மற்றும் மறுசீரமைப்பு மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கியதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.