1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 38வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

Q

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 38வது முறையாக வருகிற ஜூன் 14 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகவுள்ளது.

 

அதே போல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விபரங்களை கோரியும், அமலாக்கத்துறை தங்களுக்கு வழங்கிய ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

Trending News

Latest News

You May Like