1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: இந்த பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்..!

1

திமுகவினர் ஆட்சியை கைப்பற்றினாலும், கோவை மாவட்டத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது திமுக. இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார்.

ஆனால் அவர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என திமுக தலைமைக்கு சென்றதால், அமைச்சர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து தூக்கி விட்டு, கோவை மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது களத்தில் இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மும்மரமாக செயல்பட்டார். இதனால் கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலராக நூற்றுக்கு 97 பேரை வெற்றியடைய செய்தார். இதன் தொடர்ச்சியாக மேயர், துணை மேயர் மண்டல தலைவர், போட்டிக்கு கட்சியில் இருந்த மூத்த முன்னோடிகள் அடிபோட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மனைவி மற்றும் மகள்களுக்கு மேயர் துணை மேயர் பதிவை வாங்கிவிடலாம் என நினைத்தனர்.

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி, முகம் தெரியாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கல்பனா ஆனந்த குமாருக்கு மேயர் பதவியும், வெற்றிச்செல்வன் என்பவருக்கு துணை மேயர் பதவியும் வழங்க தலைமைக்கு பரிந்துரைக்க, அதேபோல அவர்களுக்கு பதவியும் வழங்கப்பட்டது.

1

இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர், முத்துசாமி, அனைத்து துறை சார்ந்த அலுவர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்று அடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனையை வழங்குவார் என தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த டாஸ்மாக் நிர்வாக பணிகளை அமைச்சர் முத்துசாமிக்கு கொடுத்த நிலையில், தற்போது, கோவை பொறுப்பு அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like