#BREAKING : செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி..!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளனர். முதலுதவி செய்த சிறை மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட உள்ளார்