#BREAKING : காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி..!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த இமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்களை சந்தித்து சோனியா காந்தியின் உடல்நலம் தொடர்பாக கேட்டறிந்தார்.
இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்திலும் அடிவயிறு வலி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.