#BREAKING : இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரைய்யா மருத்துவமனையில் அனுமதி..!

என்.சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி! More: https://t.co/trLqsicGhP pic.twitter.com/gUihF1UsAs
— CPIM Tamilnadu (@tncpim) November 13, 2023