#BREAKING : பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்வானியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது சீராக இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்வானி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.