#BREAKING : சீமான் வழக்கில் அதிரடி திருப்பம்..!

நடிகை ஒருவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நீதிபதி கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பின் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "நடிகை வழக்கை 3 முறை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.