#BREAKING : நாளை சென்னை திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும்..!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை சென்னைக்கு அருகே நெல்லூர் - புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளது. அப்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் எனக்கூறிய வானிலை மையம் அதற்கான ரெட் அலர்ட் விடுத்து இருந்தது.
இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களிலும் விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் நாளை(அக்.17) சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என்றும், மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.