1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

1

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தை கடந்து தர்மபுரி மாவட்டம் வழியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று முன்னதாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் நெருங்கிய போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தினர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து திமுகவினர் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like