#BREAKING : சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

சவுக்கு சங்கரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பில், ’’அன்புக்குரிய தமிழக மக்களுக்கும் சவுக்கு ஊடகத்தை பின் தொடர்பவர்களுக்கும் வணக்கம்!
இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான திரு. சவுக்கு சங்கர் அவர்களை முடக்கும் விதமாக தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை தாங்கள் நன்கு அறிவீர்கள்..
சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களை பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.
நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும்வரை காத்திருப்போம். நன்றி’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Breaking
— Savukku Media (@Savukkumedia) May 18, 2024
சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!
நீதித்துறை மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும் வரை காத்திருப்போம்!
நன்றி
சவுக்கு ஊடகம்!@savukkuofficial#savukkushankar #savukkushankarcase #savukkuarrest #savesavukkushankar… pic.twitter.com/YARbqqAQxH