#BREAKING சாத்தான்குளம் போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் மீது சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு தொடங்கினர். சாத்தான்குளம் எஸ்.ஐ ரகு கணேஷிடம் விசாரணை நடத்திய நிலையில் இதனை கொலை வழக்காக பதிவுசெய்துள்ளனர். 302 பிரிவு உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in