#BREAKING : போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது பேசிய தூய்மைப் பணியாளர்கள், “பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசுக்கு எங்கள் குரல் கேட்கவில்லை. அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தான் நாங்கள் இவ்வாறு தொடர் போராட்டம் நடத்துகிறோம்.
இன்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தோம். ஆனால், காவல் துறை மனு கொடுக்க கூட அனுமதி தரவில்லை. எங்களுடைய கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதை அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என கூறினர்.
தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
.png)