#BREAKING : ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா..!
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு அவரைப் பிரிந்தார். இதற்கிடையில், தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்த சமந்தா, 'பேமிலி மேன்', 'சிட்டாடல்: ஹனி பன்னி' போன்ற வெப் தொடர்களில் நடித்தார். அப்போது, அந்தத் தொடர்களின் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ராஜ் நிடிமொருவும் ஏற்கெனவே ஸ்யாமலி டே என்பவரைத் திருமணம் செய்து 2022 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவும் ராஜ் நிடிமொருவும் பொதுவெளியில் ஜோடியாகத் திரிந்தது, இவர்களது காதல் கிசுகிசுக்களை உறுதிப்படுத்தியது. சமீபத்தில் கூட இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமந்தா சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தெலுங்கு திரையுலகில் சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த இந்தத் தகவல் தற்போது உண்மையாகும் விதமாக, சமந்தா- ராஜ் ஜோடி இன்று (டிசம்பர் 1) திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணம் கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி ஆலயத்தில் எளிய முறையில் ரகசியமாக நடந்துள்ளது.