1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வருத்தம்.. கமல்ஹாசன் பரபரப்பு கடிதம்..,!

Q

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தனது கருத்துக்காக கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கத் தவறினால், ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர்.
இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலு, "கன்னட அமைப்புகளின் கோரிக்கையின்படி நடிகர் கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் தனது பேச்சுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது. மன்னிப்பு கேட்காவிட்டால் நிச்சயம் 100% அந்த படம் திரையிடப்படாது" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், “கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னட மொழிக்கு எதிரான சிறு கருத்தையும் எங்களால் ஏற்க முடியாது. கமல்ஹாசன் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக ஐகோர்ட்டு பல்வேறு கேள்விகளை கமல்ஹாசன் தரப்புக்கு எழுப்பியுள்ளது. அதாவது, நீங்கள்(கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்த கூடாது . கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதராம் உள்ளதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'Thug Life' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசிய ஒரு கருத்து, ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தின்மீது, குறிப்பாக சிவராஜ்குமாரிடம் கொண்ட உண்மையான பாசத்தால் வந்தது. ஆனால், அந்த உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சூழ்நிலையில் பொருத்தமில்லாத வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிந்து மனவேதனையடைகிறேன்.
என் வார்த்தைகள், நம்மை எல்லோரும் ஒரே குடும்பத்தினரே என்பதையும், நாம் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துவதற்காகவே கூறப்பட்டது. அது எந்த விதமாகவும் கன்னட மொழியை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. கன்னட மொழியின் வளமான மரபு குறித்து எந்தவொரு வாதமும் இல்லை, இருக்கும் இடமுமே இல்லை.
தமிழ் போலவே, கன்னடத்துக்கும் பெருமைமிகுந்த இலக்கியமும் கலாச்சார மரபும் உண்டு. இதனை நான் நீண்ட நாட்களாக மதித்து வருகிறேன். என் திரைப்பட வாழ்க்கை முழுவதும், கன்னடப் பேசும் மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும், அளித்த ஆதரவும் நான் மிகுந்த நன்றியுடன் நினைக்கிறேன். இதை நான் என் மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்: எனக்குள்ள கன்னட மொழிக்கான அன்பு உண்மையானது. கன்னட மக்களின் தாய்மொழிப் பற்றை நான் மிக்க மரியாதையுடன் பாராட்டுகிறேன்.
தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனது உறவு மனதாரமானது மற்றும் நிலையானது. இந்தியாவின் மொழிப் பன்மையைக் கெடுக்கும் வகையில் எந்த மொழியின் ஆதிக்கத்திற்கும் நான் என்றும் எதிராக இருக்கிறேன். ஒவ்வொரு மொழிக்கும் சமமான மரியாதை கிடைக்க வேண்டும் என்பது என் நிலைபாடாகும்.
நான் பேசும் மொழி 'சினிமா' என்பதுதான். சினிமா என்பது எல்லோரிடமும் பாசமும் நேசமும் பரப்பும் ஒரு உலக மொழி. நான் சொன்ன கருத்தும் நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்ற உறவையும் ஒற்றுமையையும் வலியுறுத்தவேயாகும்.
இந்த அன்பும் உறவும்தான் எனக்கு என் முன்னோர்கள் கற்றுத் தந்தார்கள் - அதைத்தான் நான் பகிர விரைந்தேன். இந்தப் பாசத்தின் விளைவாகத்தான் சிவன்னா (சிவராஜ்குமார்) அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். இந்தக் கருத்து விவகாரத்தால் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் சங்கடத்திற்கு நான் வருந்துகிறேன். ஆனால், நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உண்மையான அன்பும் மரியாதையும் இதன் பின் மேலும் வலிமையாகத்தான் அமையும் என நான் நம்புகிறேன்.
சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவர்களாக இல்லை. என் வார்த்தைகள் நான் கொண்டிருந்த உண்மையான நோக்கத்தோடு உணரப்படட்டும் என நான் மனமார நம்புகிறேன். கர்நாடகம், அதன் மக்கள் மற்றும் அவர்களது மொழிக்கான எனது நிலையான பாசமும் மரியாதையும், அதன் உண்மை அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என உளமார விரும்புகிறேன். இந்தத் தவறான புரிதல் தற்காலிகமானதுதான் என்றும், நாம் ஒருவரையொருவர் காணும் அன்பும் மரியாதையும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like