#BREAKING : சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு..!
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும்மண்டல மற்றும் மகர விளக்குபூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்த யாத்திரையின்போதுவிபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் சிலர் உயிரிழக்கின்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிவித்தது கேரள அரசு.
தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.